Reading Time: < 1 minute

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. கனடாவோ ஒருபடி மேலே போய் ரஷ்யாவுக்கு சொந்தமான ஒரு விமானத்தை சிறைபிடித்துள்ளது.

ரஷ்ய சொத்து ஒன்றை இப்படி சிறைப்பிடித்துள்ள முதல் நாடு கனடா ஆகும்.

சுமார் 15 மாதங்களாக கனடாவில் அந்த சரக்கு விமானம் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை உக்ரைனுக்கு வழங்கும் திட்டம் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

ஆனால், 15 மாதங்களாக நிறுத்திவைக்கபட்டிருந்ததால் அந்த விமானத்தில் பராமரிப்புப் பணிகள் உள்ளன. அத்துடன், சில சட்டப்படியான நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரே அந்த விமானத்தை உக்ரைனுக்குக் கொடுக்கமுடியும் என்கிறார்கள் சட்டவியல் நிபுணர்கள்.