Reading Time: < 1 minute

பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரும் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது, கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது ஊடகவியலாளர் ஒருவர், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த ட்ரம்பின் அறிக்கைகள் குறித்து நீங்கள் அவருடன் விவாதித்தீர்களா என ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரித்தானிய மன்னர், தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒரு நாட்டை, அவரது கட்டுப்பாட்டிலிருந்து அகற்ற விரும்பும் அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பம் குறித்து கவலை தெரிவித்தாரா என ஸ்டார்மரிடம் கேட்டார் அந்த ஊடகவியலாளர்.

அதற்கு ஸ்டார்மர் பதிலளிக்கும் முன் பேசத்துவங்கிய ட்ரம்ப், வரிசையாக வெவ்வேறு விடயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசி முடித்ததும், நீங்கள் எங்களிடையே இல்லாத ஒரு பிளவை கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், பிரித்தானியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள்.

நாங்கள் பல நல்ல விடயங்கள் குறித்து விவாதித்தோம், ஆனால், கனடா குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை என்றார் ஸ்டார்மர்.

அப்போதும் அந்த ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்ப முயல, உடனே குறுக்கிட்ட ட்ரம்ப், அது போதும்! நன்றி, என அந்த ஊடகவியாளரை பேசவிடாமல் தடுத்துவிட்டார்!

Comments are closed, but trackbacks and pingbacks are open.