கனடாவில் ஒட்டாவாவில் இரண்டு வயதேயான சிறுவன் விபத்து ஒன்றின் போது தைரியமாக நடந்து கொண்ட விதம் அனைவரினாலும் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவன் குளியலறையின் பார்த்டப் சிங்கில் (bathtub drain sink) விரல் சிக்கிக் கொண்டுள்ளது.
இரண்டு வயதான கிரேசன் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.
இரண்டு வயது சிறுவனின் மூன்று விரல்கள் சிங்க் துளையில் சிக்கிக் கொண்டதாக தீயணைப்புப் படையினருக்கு பெற்றோர் அறிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற தீயணைப்புப் பிடையினர் சில மணித்தியாலங்கள் போராடி சிறுவனின் விரல்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்த மீட்புப் பணியின் போது சிறுவன் பதற்றமடையாது மிகவும் நிதானமாக தீயணைப்புப் படை வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திர சாதனங்களின் உதவியுடன் பார்த் டப்பின் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான முறையில் சிறுவனின் விரல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் விரல்களை மீட்ட போது சிறுவன் அனைவருக்கும் நன்றி கூறிய விதம் சூழ்ந்திருந்த அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.