கனடா – அமெரிக்க எல்லையில் கடுமையான குளிரில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 டசின் மக்களுக்கும் அதிகமானோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். கியூபெக்கின் St-Bernard-de-Lacolle நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த மாத துவக்கத்தில் 44 வயதான Fritznel Richard என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
மாகாண பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், அவர் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கடும் குளிரில் சிக்கி இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். ஹெய்டியை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளரான Fritznel Richard பணி செய்யும் உரிமைக்காக காத்திருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் மகணுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கவும், சட்டப்படியான அந்தஸ்தை பெறவும் ஆவலுடன் இருந்தார்.
இந்த நிலையிலேயே உத்தியோகப்பூர்வமற்ற எல்லையில் Fritznel Richard-ன் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே பகுதியில் சுமார் 40,000 புகலிடக் கோரிக்கையாளர்களை பொலிசார் வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது.