Reading Time: < 1 minute

கனேடிய ஆயுதப் படையின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய படையினருக்கு விரைவில் GO ட்ரான்சிட் போக்குவரத்து சேவையில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் சிறுவர்கள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மைக்கேல் பர்சா இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒன்றாரியோ மாகாணத்தில், படையினருக்கான போக்குவரத்து நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எதிர்காலத்தில் UP எக்ஸ்பிரஸ் வரை இலவச சேவையை நீட்டிக்கும் திட்டமும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவு தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கனடா மற்றும் ஒன்டாரியோவை இன்றைய நிலையில் மாற்றுவதற்கு படைவீரர்கள் மகத்தான தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் பார்சா தெரிவித்துள்ளார்.