Reading Time: < 1 minute

கனடாவில் பெண்கள் நாடாளுமனற்ற உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக நேற்று ஒட்டாவாவில் நடத்தியது. Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு பெண்கள் அனைத்து துறையிலும் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கிய அமைப்பாகும்.

இந்த நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் அனிதா ஆனந்த் கலந்துகொண்டார். அது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, கனடா அரசியலுக்கு அதிகளவிலான பெண்கள் மற்றும் பன்முக தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

2001 முதல் EqualVoice CA நாடு முழுவதும் உள்ள நமது நாடாளுமன்றம், மாகாண மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள் மற்றும் நகர அரங்குகளில் சமமான பிரதிநிதித்துவத்திற்காக வாதிடவும், செயல்படுத்தவும் கடுமையாக உழைத்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.