கனடிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டமானது மரபு ரீதியான அடிமைத்துவத்தை ஏற்படுத்தும் பின்னணியை உருவாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் கடந்த ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்து தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஆய்வு நடத்தி இருந்தார்.
தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பதனை முடக்கும் வகையிலான சட்டங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தற்காலிக பணியாளர் திட்டத்தின் கீழ் கனடாவில் பிரவேசிக்கும் ஒருவர் தொழில் தருணரினால் பணிநீக்கம் செய்யப்பட்டால் நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளாகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெளிநாட்டு தற்காலிக பணியாளர் திட்டமானது தொழிலாளர் நலன்களை முடக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு வழிகளில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் இந்த திட்டம் காணப்படுவதாக சுட்டி கட்டப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் பணியாற்றுவதற்காக கொடுப்பனவு வழங்காமை, போதிய அளவு இடைவேளை வழங்காமை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொழிலாளர்கள் உரிமை முடக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில் தருணர்கள் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், வாய்மொழி மூலமாகவும் பணியாளர்களை துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பணியாளர்களுக்கு சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில பணியாளர்கள் வலி நிவாரணிகளை பயன்படுத்தி பணிக்கு திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர்களுக்கான வீடமைப்பு வசதிகள் கழிவறை வசதிகளும் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்கள் எண்ணிக்கை 88 விதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வெளிநாட்டு தற்காலிக பணியாளர்களது உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை எனவும் அடிமைத்துவ வாழ்க்கையை வாழ நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.