Reading Time: < 1 minute

கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார்.

ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ரொறன்ரோ நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல், படிப்பில் சிறந்து விளங்கியதால் பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என அவரது தந்தை ஆல்பர்ட் சந்தேகிக்கிறார்.

இதற்கிடையில், மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.