Reading Time: < 1 minute

கட்டார் ஏர்வேஸால் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.