Reading Time: < 1 minute

பிஸி (BC) ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தை செலுத்த தயாராக இருக்குமாறு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டிலிருந்து 1 சதவீதம் கட்டண குறைப்பு அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான குறைந்த வீதத்துடனான ஒரு புதிய திட்டத்தை ஒப்புதலுக்காக (பி.சி.யூ.சி). பயன்பாட்டு ஆணையம் அனுப்பியுள்ளது.

எனினும், கடந்த ஆண்டுகளில் கட்டண வீதம் அதிகதிரித்தே சென்றுள்ளது. இந்த நிலையில் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தற்போது கட்டணம் குறையவுள்ளது.

புதிய திட்டத்தில் ஏப்ரல் 2020 நிலவரப்படி ஒரு சதவீத வீதக் குறைப்பு அடங்கும். இதில் 2021ஆம் ஆண்டில் 2.7 சதவீத அதிகரிப்பு, 2022ஆம் ஆண்டில் 0.3 சதவீதம் குறைவு மற்றும் 2023ஆம் ஆண்டில் 3 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை அடங்கும்

அடுத்த ஐந்து, ஆண்டுகளில் ஒட்டுமொத்த உயர்வு எட்டு சதவீதத்திற்கு பதிலாக 6.2 சதவீதமாக இருக்கும்.