Reading Time: < 1 minute

இயற்கை பேரழிவுகளை கையாள்வதற்கான ஒட்டாவாவின் சட்டமூலங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டொலர்களை நெருங்கியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பேரழிவு உதவிக்காக ஓராண்டு சராசரியாக, 430 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு கனடாவின் தரவு தெரிவிக்கின்றது.

இதில், 2016-17ஆம் ஆண்டில் 485.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2017-18ஆம் ஆண்டில் 494.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2018-19ஆம் ஆண்டில் 309.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்கும்.

அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசின் சராசரி வருடாந்திர பேரழிவு தூய்மைப்படுத்தும் கொடுப்பனவுகள் 360 மில்லியன் டொலர்களாக இருந்தன. இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரி செலவினங்களின் மூன்று மடங்கு ஆகும்.

வெள்ளம் மற்றும் காட்டுத் தீ போன்ற முக்கிய பேரழிவுகளின் செலவுகள் ஒரு மாகாணத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்கும்போது பேரழிவு உதவித் திட்டம் மாகாணங்களுக்கு உதவுகிறது.

2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கனடாவுட் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.