Reading Time: < 1 minute

வின்னிபெக்கைத் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தாக்கிய பனிப் புயலில் இருந்து, நகரரை மீட்டெடுக்கும் பணிக்கு, நிதி பற்றாக்குறையாக இருப்பதாக நகர நிதிக்குழு தெரிவித்துள்ளது.

புயலால் விழுந்த ஆயிரக்கணக்கான மரங்களையும் கிளைகளையும் சுத்தம் செய்யவும், வீதிகளில் சூழ்ந்திருந்த பனிகளை அகற்றுவதற்கும், ஏற்கனவே 6.4 மில்லியன் டொலர்கள், ஒதுக்கப்பட்டது.

ஆனால். இவ்வாறான துப்பரவு பணிகளில் இன்னமும் முழுமையடையாத நிலையில், மேலும், 1.1 மில்லியன் டொலர்கள் ஈட்டப்படுவதன் மூலம் குறித்த பணிகள் முழுமையடையும் என நகர நிதிக்குழு தெரிவித்துள்ளது.

நகரின் நீர் மற்றும் கழிவுத் துறைக்கு மேலும், 800,000 டொலர்கள் செலவாகும், 2020ஆம் ஆண்டில் 400,000 டொலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த தொகைகள் கடந்த ஆண்டு நகரின் நிதி ஒதுக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்னிபெக்கைத் தாக்கிய பனிப் புயலில் சுமார் 30,000 மரங்கள் சேதமடைந்துள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர், வின்னிபெக்கில் இப்படியானதொரு மோசமான பனிப் புயல் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் புரட்டியெடுத்த பனிப்புயல், மனிடோபாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மின்விநியோக தடையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு அவசரகால நிலையும் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.