கடந்த 2018ஆம் ஆண்டில் சட்பரி மற்றும் மனிடூலினில் ஓபியாய்ட் தொடர்பாக, 32பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை, சட்பரியின் சமூக மருந்து மூலோபாயத்தின் இணைத் தலைவரான வைத்தியர் பென்னி சுட்க்ளிஃப் வெளியிட்டுள்ளார்.
இதன்போது, ஓபியாய்ட் நெருக்கடி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை பாதித்துள்ளது என்று சட்க்ளிஃப் கூறினார்.
சட்க்ளிஃப், பொது சுகாதார சட்பரி மற்றும் மாவட்டங்களுக்கான சுகாதார மருத்துவ அதிகாரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராண்ட்ஃபோர்ட்டில், 2020ஆம் ஆண்டின் முதல் 12 நாட்களில் 17 அளவுக்கு அதிகமான ஒபியாய்ட்டை எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அண்மையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை நினைவுக்கூரத்தக்கது.