Reading Time: < 1 minute
கனடாவில் கஞ்சா வைத்திருந்தமைக்காக குற்றப்பதிவுகளை எதிர்கொண்டவர்கள், தற்போது அதற்கான பொது மன்னிப்பினை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியுமென, மத்திய நீதியமைச்சு அறிவித்துள்ளது.
முன்னர் இவ்வாறான சிறிய குற்றப்பதிவுகளுக்கான மன்னிப்பினை பெற, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுடன், 631 டொலர்களும் செலுத்தவேண்டும்.
கனடிய அரசு கொண்டுவந்துள்ள C93 சட்டமூலத்தின் அடிப்படையில், தற்போது, உடனடியாகவும் இலவசமாகவும், கஞ்சா வைத்திருந்தமைக்கான குற்றப்பதிவுகளை அகற்றமுடியும்.
சுமார் 250,000 கனடியர்கள், கஞ்சா வைத்திருந்தமைக்கான சிறிய குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.