Reading Time: < 1 minute

லண்டன் பகுதியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிடில்செக்ஸ்- லண்டன் அவசர மருத்துவ சேவைகளின் செயற்பாட்டு கண்காணிப்பாளர் ஆடம் பென்னட், கூறுகையில்,

‘இந்த ஆண்டு 438 அதிகப்படியான அழைப்புகளுக்கு துணை மருத்துவர்கள் பதிலளித்துள்ளனர். மேலும் 161 பேருக்கு, ஓபியாய்டுகளின் விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் 219 டோஸ் நலோக்சோன் வழங்கியுள்ளனர்’ என கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு 111 பேருக்கு மொத்தம் 192 டோஸ் நலோக்சோனை அதிகாரிகள் வழங்கியதாக லண்டன் பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர்.