Reading Time: < 1 minute

கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டிகளில் எதிர் நோக்கிய சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

கனடிய என்.டி.பி கட்சியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரின் மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளின் போது ஏனைய வீராங்னைகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நியூசிலாந்து அணி வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டதனை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

ட்ரோன் கேமராக்களை கொண்டு இவ்வாறு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை காரணமாக மகளிர் தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

அணியின் பயிற்றுப்பாளர் பெவ் பிரிட்ஸ்மான் மற்றும் ஏனைய பயிற்றுவிப்பு குழாம் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விதத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என என்.டி.பி கட்சி கோரி உள்ளது.