Reading Time: < 1 minute
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் செக்அவுட் பைகள், ஸ்டரா, கடினமான மறுசுழற்சி பிளாஸ்டிக்குகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்பட ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய கனடா திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடு என்ற இலக்கை அடைய தேசம் மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிளாஸ்டிக் மாசுபாடு நமது இயற்கை சூழலை அச்சுறுத்துகிறது. இது நமது ஆறுகள் அல்லது ஏரிகளை, குறிப்பாக நமது பெருங்கடல்களை நிரப்புகிறது என கனேடிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொனாதன் வில்கின்சன் தெரிவித்தார்.