கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் போதை பொருள் பயன்பாடு தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றிக்கு அருகாமையில் கண்காணிப்புடனான போதைப் பொருள் பயன் பாட்டு நிலையங்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
போதைப் பொருள் பயன்பாடு குறித்த போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பின் கீழ் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு கனடாவின் பல்வேறு இடங்களிலும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போதைப்பொருள் நுகர்வு மையங்களை பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் இயக்கக் கூடாது என ஒன்றாரியோ அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
இதன் அடிப்படையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் காணப்படும் போதைப்பொருள் நுகர்வு மையங்களை தடை செய்வதற்கு சட்டம் இயற்றப்பட உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.