Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வது சவால் மிக்கது என தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பம் ஒன்று வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு ஆண்டுக்கான வீட்டு வாடகையை மொத்தமாக செலுத்த தயார் என அறிவித்துள்ளது.

எனினும், அந்தக் குடும்பத்தினால் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவின் அயுரோராவில் வாழ்ந்து வரும் டேவிட் எலிசன் குடும்பத்தினரே இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

வாடகைத் தொகையிலும் 200 டொலர் கூடுதலாக வாடகை செலுத்தவும் தயார் என அறிவித்துள்ளனர்.

எனினும் அவர்களினால் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சனத்தொகை வளர்ச்சி போன்ற காரணிகளினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.