Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு கொள்வனவு செய்ய காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

வீடு கொள்வனவு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த வரித் தொகை 20 வீதம் எனவும், இந்த தொகை 25 வீதமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண நிதி அமைச்சர் பீட்டர் பீதென்பெவ்லி இந்த வரி அதிகரிப்பு குறித்து அறிவித்துள்ளார்.

முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த மார்ச் மாதம் 15 வீதமாக இருந்த வரித் தொகை 20 வீதமாக உயர்த்தப்பட்டது.

றொரன்டோ பெரும்பாக பகுதி உள்ளிட்ட மாகாணத்தின் அநேக பகுதிகளில் வீடுகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.

வரி விதிப்பு அதிகரிப்பானது வெளிநாட்டு வீட்டுக் கொள்வனவாளர்கள் கொள்வனவு செய்வதனை வரையறுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.