கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
சைக்கிள் விபத்து மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 50 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வேகம் கட்டுப்பாட்டை இழத்தல் வீதி போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற காரணங்களினால் இவ்வாறு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கவனயீனமாக வாகனம் செலுத்துவது அதிக அளவு விபத்துகளுக்கு ஏதுவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.