கடனாவில் இரு வேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாணம் பிரட்போர்ட் கிவிலிம்புரி அதிவேக நெடுஞ்சாலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன், என்ன காரணத்தினால் மரணம் சம்பவித்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அது பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹமில்டனின் என்காஸ்டர் பகுதியில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் யார் என்பது பற்றிய விபரங்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடாத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.