Reading Time: < 1 minute
கொரோனா அவசரகால உத்தரவுகள் அடுத்த ஆண்டு வரையில் தொடரும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணத்தில் இந்த அவசரகால உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த அவசரகால உத்தரவிக் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதியுடன் காலாவதியாகின்றது.
மாகாணத்தில் மீளவும் கொரோனா தொற்று நிலைமைகள் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் அவசரகால உத்தரவினை தொடர்ந்தும் நீடிப்பதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 2022ம் ஆண்டு மார்ச் வரையில் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.