Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகண முதல்வர் டக் ஃபோர்டினால் முன்வைக்கப்பட்ட இராணுவ உதவி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றாரியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கூறுகையில், ‘மாகாணம் 250 வீரர்களைக் கோரியது. குழுக்களில் 50 பேர் ஈடுபடுத்தப்படுவர்.

மருத்துவப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஒரு அதிகாரியால் நீண்டகாலப் பராமரிப்பு ஊழியர்களை ஆதரிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் மருத்துவ பின்னணி இல்லாதவர்கள் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்’ என கூறினார்.

மேலும், இதுகுறித்து ஒன்ராறியோவின் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள் சங்க தலைவர் கூறுகையில், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இராணுவ உதவியை பெற பிரதமர் முடிவு செய்ததில் ஆச்சரியமாக இருக்கிறது’ என கூறினார்.

தலைமை நிர்வாக அதிகாரி டோரிஸ் கிரின்ஸ்பன் கூறுகையில், ‘டக் ஃபோர்ட் உள்ளூர் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களை உதவிக்கு அழைப்பார் என்று தான் எதிர்பார்த்தேன்’ என கூறினார்.

நிர்வாக கடமைகளை நிர்வகிக்க உதவுவதற்கும், நோயாளியின் கவனிப்பில் கவனம் செலுத்துவதற்கும், அதிக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு அளிப்பதற்காக செவிலியர்கள் மற்றும் தனிப்பட்ட ஆதரவு தொழிலாளர்களை விடுவிப்பதற்கும் கனேடிய ஆயுதப்படைகளுடன் கூடிய உறுப்பினர்கள் ஐந்து நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.