ஒன்றாரியோ மாகாண சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வாகன அனுமதிப்பத்திர தகடுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அனுமதிப்பத்திரம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றாரியோ மாகாணத்தில் அனுமதிப்பத்திர தகடுகளுக்கு கட்டணம் அறவீடு செய்யும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.
எனினும், அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது அனுமதிப்பத்திர தகடுகளை புதுப்பிக்கத் தவறும் சாரதிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையைய விடுத்துள்ளனர். ஒன்றாரியோவின் சில சாரதிகளுக்கு 500 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இணையம் வழியாக அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.