Reading Time: < 1 minute
ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை (25-01-2022) 64 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை செவ்வாய்க்கிழமை ஒன்ராறியோ வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,008 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 626 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கனடாவில் இன்று முதல் ஆவணப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன, அந்த நேரத்தில் மாகாணத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான Covid19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, 11,068 உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் காரணமாக 108 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.