ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் 92 ஆவது வயதில் பிராம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் 18 வது முதல்வராக 1971 முதல் 1985 வரை வில்லியம் டேவிஸ் இருந்தார்.
1959 இல் முதன்முதலில் ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கு வில்லியம் டேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்க முன்பு கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புக்களையும் அவர் வகித்தார்.
இந்நிலையில் ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் மறைவுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த வில்லியம் டேவிஸ் நாட்டுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றிச் சென்றுள்ளார். அவரது சேவைகளின் தாக்கம் எதிர்காலதிலும் உணரப்படும் எனவும் இரங்கல் செய்தியில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வில்லியம் டேவிஸ் ஒன்ராறியோவின் மிகவும் வெற்றிகரமான முதல்வராக இருந்தார். அவரின் இழைப்பு வருத்தத்துக்குரியது என பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.