ஒன்ராறியோவில் உள்ள வில்ப்ரிட் லாரியர் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அங்குள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிளாரா கான்ராட் ஹோல் இல்லத்தின் இரண்டு தளங்களில் வாட்டர்லூ பொது சுகாதாரத் துறை தொற்றுநோயை அறிவித்ததாக பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வச் செய்தி வெளியீடு கூறுகிறது.
இதனைத்தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இதுகுறித்து லாரியரில் மாணவர் விவகாரங்களின் துணைத் தலைவர் இவான் ஜோசப் கூறுகையில், ‘தொற்றுநோயை மேலும் நிர்வகிக்க பல்கலைக்கழகம் பொது சுகாதாரத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இந்த தொற்றுநோயை நிர்வகிப்பதற்கும், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கும் நாங்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்’ என கூறினார்.