ஒன்ராறியோவின் சிம்கோவிற்கு அருகிலுள்ள ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் பிடில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் 14 நாட்கள் சுயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தபோதும், தற்போது 25 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தொற்று நேர்மறை என்று பரிசோதனை முடிவு வந்தமை அதிர்ச்சி அளிப்பதாகவும் ஹால்டிமண்ட் நோர்போக்கின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ஷங்கர் நேசதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மூன்று நேர்மறையான பரிசோதனை முடிவுகள் உள்ளன. மேலும் 26 தொழிலாளர்கள் பருவகால விவசாயத் தொழிலாளர்களுக்கான 3 குடியிருப்புகளில் அறிகுறிகளாக உள்ளனர். 140 பேர் இப்போது தனிமையில் உள்ளனர்’ என கூறினார்.