Reading Time: < 1 minute
ஒண்டாரியோ பாடசாலைகளில், மாணவர் வருகை குறித்த தரவுகள் இன்றுமுதல் மாகாண அரசால் வெளியிடப்படுகின்றன.
கோவிட் 19 காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, பாடசாலைக்கு வருகை தராத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் சதவீதம் 30ஐ கடந்தால், அது பெற்றோருக்கு அறியத்தரப்படவுள்ளது.
ஒண்டாரியோவின் 4,800க்கும் மேலான பாடசாலைகளில், 3,453 பாடசாலைகள், இன்று முதல்நாளில், தத்தமது பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வரவின்மையை ஒப்படைத்துள்ளன.
இவற்றில், டொரோண்டோவில் 72 பாடசாலைகள் அடங்கலாக, மொத்தம், 337 பாடசாலைகளில், 30 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் வருகை தரவில்லை.