ஒட்டாவாவில் கடுமையான குளிர்கால பனியைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடங்கள் வழமைக்கு திரும்பியுள்ளது.
கடுமையான பனியைத் தொடர்ந்து வாகன தரிப்பிடங்கள் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பனி நிரம்பியுள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்நிலைமை மோசமடைந்ததால், வாகன தரிப்பிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சேறும் சகதியுமாக இருந்த வீதிகள் மற்றும் வாகன தரிப்பிடங்களை பனி அகற்றும் குழுக்கள் சுத்தப்படுத்தியதையடுத்து, வாகன தரிப்பிடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக நகரின் வீதிகள் மற்றும் வாகன தரிப்பிட சேவைகளின் இயக்குநர் லைலா கிப்பன்ஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து வீதிகள் மற்றும் நடைபாதைகள், அதே போல் சைக்கிள் ஓட்டுதல் பாதைகளும் பயணத்திற்கு தயாராக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஈரமான, கடும் பனி இப்பகுதி முழுவதும் பெய்து வருவதனை கவனிக்கப்படாமல் விட்டால் மீண்டும் கன தரிப்பிடங்கள் முடக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.