ஒட்டாவா நகருக்கு கிழக்கே குடியிருப்பு ஒன்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மேலும் இரு பொலிசார் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் போர்கெட் கிராமத்திலேயே தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், லாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக யாரோ ஒருவர் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் தொடர்புடைய பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து மூன்று அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அந்த பொலிசார் மூவர் மீதும் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். மூவரும் ஒட்டாவா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய இருவரும் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.