பலத்த காற்றுடன் பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 75 முதல் 100 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக ஒட்டாவாவில் வீதிகள், வாகன தரப்பிட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் மூன்று அடிவரையில் வெள்ள நீரில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் இரவு கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெள்ளை நிலைமை என்னால் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் சுமார் 25,000 வாடிக்கையாளர்கள் மின்சார தடையினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.