ஸ்பெயினின் மட்ரிட் நகரில் இடம்பெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட மந்தமான தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வார COP25 மாநாட்டைத் தொடர்ந்து ஜொனாதன் வில்கின்சன் அதிருப்தி அடைந்த பிரதிநிதிகளின் அணியில் சேர்ந்து கொண்டார்.
சர்வதேச கார்பன் சந்தைகளுக்கான விதிகள் குறித்த விவாதத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் முடிவில் அவரும் அவரது குழுவும் திருப்தியடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, “சமரசம் மற்றும் செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அபிலாஷைகளுடன் கனடா COP25 மாநாட்டில் பங்கு கொண்டது.
சில வெற்றிகள் இருந்தபோதிலும், சர்வதேச கார்பன் சந்தைகளுக்கான விதிகளை உலகம் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம், இந்த விடயம் மட்ரிட்டில் எங்கள் லட்சியத்தை மேலும் உயர்த்த உதவும்” என்று டுவிட்டரில் அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் பதிவிட்டுள்ளார்.