Reading Time: < 1 minute
கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 1.16 பில்லியன் டொலர்கள் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஏர் கனடா கூறுகிறது.
கோவிட் தொற்றுநோய் நெருக்கடியால் விமான பயணங்கள் குறைந்தமை அல்லது இடைநிறுத்தப்பட்டமையால் விமான சேவை மூலம் கிடைக்கும் வருவாய் 2020 நான்காவது காலாண்டில் 827 மில்லியனாக குறைந்துள்ளது. இது 2019 நான்காவது காலாண்டில் 4.43 பில்லியனாக இருந்தது.
2020-ஆம் ஆண்டு வணிக விமான சேவை வரலாற்றில் மிகவும் இருண்ட ஆண்டாக இருந்தது என ஏர் கனடா தலைமை நிர்வாகி காலின் ரோவினெஸ்கு தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் சாதனை வளர்ச்சியைத் தொடர்ந்து 2020-இல் ஏர் கனடா பயணிகளின் தொகை 73 வீதத்தால் குறைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.