Reading Time: < 1 minute
எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்குவதன் மூலம் தாக்குதல் ரக துப்பாக்கித் தடையை மேலும் வலுப்படுத்தலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய நடவடிக்கைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு எதனையும் அவர் வெளியிடவில்லை.
இந்த துப்பாக்கி தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. அதற்குப் பதிலாக, கனடா அரச இதழில் விதிமுறைகளின்படி வெளியிடப்பட்டது.
கனடாவில் இராணுவத் தரத் தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவித்தது.
இதற்கமைய, கனடாவில் 1,500 தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த தடை உத்தரவானது, உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் இந்த வகையான ஆயுதங்களை விற்பனை செய்வது, கொண்டு செல்வது, இறக்குமதி செய்வது அல்லது பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது.