கனடா- அமெரிக்க எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைக்கு வடக்கே படிக்கத் திட்டமிடும் அமெரிக்க மாணவர்களுக்கு மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவிலிருந்து முதல் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவது சாத்தியமாகிறது.
இப்போது அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு மாணவருக்கு எல்லைக் கட்டுப்பாடுகள் முதலில் அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் மாதம் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆய்வு அனுமதி இனி தேவையில்லை என பன்னாட்டு மாணவர்களுக்கான அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல் கூறுகின்றது.
ஒன்லைனில் முழுமையான விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கான ஆய்வு அனுமதிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்.
கனடாவில் குறைந்தது 50 சதவீத திட்டம் முடிக்கப்பட்டால், கனடாவில் பணி அனுமதிகளுக்கான தகுதிக்கு மாணவர்கள் ஒன்லைனில் படிப்பதற்கான நேரத்தை விண்ணப்பிக்க முடியும்.