கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர்.
அப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன என நேற்று தகவல் வெளியானது.
குறிப்பாக, Roxham Road என்னும் இடம் வழியாக பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருவதால், அந்த பகுதியை மூட திட்டமிடப்பட்டு வருகிறது.
ஆனால், அப்படி எல்லையை மூடுவது மோசமான முடிவு என்கிறார் Frantz André.
இவர், Roxham Road வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவின் கியூபெக்குக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு உதவிவருபவர் ஆவார்.
ஜனவரி மாதம், Fritznel Richard என்பவரது அஸ்தியைக் கொண்டு வருவதற்காக ப்ளோரிடாவுக்குச் சென்று அவரது அஸ்தியை அவரது மனைவியான Guendaவிடம் சேர்த்ததுடன், Naplesஇல் நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள Guendaவுக்கு Frantz உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், Concordia பல்கலை துணைப் பேராசிரியரான Mireille Paquet, Roxham Road என்னும் இடத்திலுள்ள எல்லையை மூடுவது, அதிகம்பேர் உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்தும் என்கிறார்.
இந்த இடம் மூடப்படுவதால் மக்கள் தெற்கு நோக்கி பயணிக்க முனைவார்கள், அது கூடுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் கனேடிய எல்லையைக் கடக்க முயன்ற இரண்டுபேர் உயிரிழந்துள்ளார்கள். Fritznel Richard (43) என்பவர் ஜனவரி மாதத் துவக்கத்திலும், Jose Leos Cervantes (45) என்பவர் பிப்ரவரி 19ஆம் திகதியும் எல்லையருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.