Reading Time: < 1 minute

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பெற்றோலின் விலை 14 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெற்றோலின்விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒன்றாரியோவின் பல இடங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179.9 சதங்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எரிபொருள் நிறுவனங்களின் செயற்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மாகாண முதல்வர் டக் போர்ட் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் விலை உயர்த்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.