சனிக்கிழமை காலை அரோரா பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையான நிலையில், அந்த வீட்டினுள் இருந்து சடலம் ஒன்றினை மீட்ட அதிகாரிகள் அது தொடர்பில் மோற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடரந்து 36 வயது பெண் ஒருவரைக் கைது செய்து, அவர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.
Yonge street மற்றும் Wellington street பகுதியில், Edward Street இல் அமைந்துள்ள வீட ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், வீடு முழுவதும் தீயால் சூழப்பட்டு காணப்பட்டதாகவும், உடனடியாகவே மீட்புப் படையினர் உள்ளே நுளைய முடியாத சூழ்நிலை நிலவியதாகவும், சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீப்பரவலைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து வீட்டினுள் நுளைந்த படையினர், அங்கே ஆண் ஒருவரைச் சடலமாக மீட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்ததை அடுத்து, அது குறித்து விசாரிக்க மனிதக் கொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிடட யோர்க் பிராந்திய காவல்துறையினர், குறித்த அந்த ஆணின் மரணம் தொடர்பில் அரோராவைச் சேர்ந்த 36 வயதான மெலிசா கலேனா என்ற பெண்ணைக் கைது செய்து, அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மரணமான ஆணின் அடையாளங்களை கண்டறிவது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.