Reading Time: < 1 minute
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா நிறுவனம், தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள விவகாரம் தொடர்பாக, அந்நிறுவனத்துக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எயார் கனடா நிறுவனம், குறைந்தபட்சம் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பணி நீக்கமானது ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்தநிலையில், இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் கூறுகையில், ‘இந்தத் தொற்றுநோயால் விமான நிறுவனங்கள் நம்பமுடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் எவ்வளவு சிறப்பாக உதவ முடியும் என்பதைப் பார்க்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்’ என கூறினார்.