Reading Time: < 1 minute

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளின் அளவு, கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி தெரிவித்துள்ளது.

ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி கீழுள்ள நிறுவனங்கள் மொத்தமாக 173 மில்லியன் டொலர்கள் கடன்பட்டிருப்பதாகக் ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வசந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது 114 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இயற்கை வளங்களை அணுக தொழில் சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்க நகராட்சிகளுக்கு சொத்து வரி தேவைப்படுகிறது ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி சங்கத் தலைவர் அல் கெம்மெர் தெரிவித்துள்ளார்.