கனேடியர்கள் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சர்வதேச அளவில் பெயர் பெற்றவர்கள்தான். ஆனால், இப்போது அதை ஒரு தரவரிசைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஆம், ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் ஒன்றில் கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.
ஒரு நாட்டின் மருத்துவ சேவை, குறைந்தபட்ச ஊதியம், வெளிநாட்டவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப்பட்டியலில் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இணையான புள்ளிகள் பெற்ற கனடா, உலக சமாதான தரவரிசைப்பட்டியலில் அவுஸ்திரேலியாவைவிட அதிக புள்ளிகள் பெற்றுள்ளது.
ஆனால், குறைந்தபட்ச ஊதியம், வெளிநாட்டவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை ஆகிய காரணிகளில் அது பின்தங்கிவிட்டது.
கனடா, உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கு, உலகிலேயே நன்கு பழகக்கூடியவர்களைக் கொண்ட நகரமாக வான்கூவர் சமீபத்தைய ஆய்வு ஒன்றில் தேர்வுசெய்யப்பட்டதும் ஒரு காரணமாகும். மொன்றியல் அந்த பட்டியலில் 34ஆவது இடத்தைப் பிடித்திருந்தது (நேர்மறையான இடம்தான்!).
ஆனால், உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த டென்மார்க் மற்றும் நெதர்லாந்தையும், அவற்றைப் பின்தொடர்ந்து வந்த ஜேர்மனி, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் கனடா மிஞ்சிவிட்டது.
இந்த பட்டியலில் அமெரிக்கா 16ஆவது இடத்தில் உள்ளது. பட்டியலிலேயே, அமெரிக்காவின் மருத்துவ சேவைக்குதான் மிகக் குறைவான புள்ளிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.