Reading Time: < 1 minute

உலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வடமேற்கு பெருநிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள, ஆதிகால பஞ்சுயிரி என நம்பப்படும் விலங்கு ஒன்றின் படிமம், 890 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என, ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன.

இதுநாள் வரையில், உலகின் மிகப்பழமையான விலங்கினம் கூட, கனடாவின் Newfoundlandஇல் கண்டுபிடிக்கப்பட்ட படிமத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கனடாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கின் படிமம், அதன் ஆயுள் உறுதிப்படுத்தப்படுமிடத்து, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பழமையான விலங்கினத்தின் படிமத்தை விட 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கும் என் கணிக்கப்பட்டுள்ளது..