Reading Time: < 1 minute
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது.
அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் , இரண்டாவது இடத்தை சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன.
அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகியநாடுகள் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களைப்பிடித்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள்,
- ஜப்பான் (193 இடங்கள்)
- சிங்கப்பூர், தென் கொரியா (192 இடங்கள்)
- ஜெர்மனி, ஸ்பெயின் (190 இடங்கள்)
- பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (189 இடங்கள்)
- ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (188 இடங்கள்)
- பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (187 இடங்கள்)
- பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு (186 இடங்கள்)
- அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (185 இடங்கள்)
- ஹங்கேரி, போலந்து (184 இடங்கள்)
- லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (183 இடங்கள்)