Reading Time: < 1 minute

ரொறன்ரோ தம்பதி ஒன்று தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில், அவர்களின் குடியிருப்பை விற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளது இன்னொரு தம்பதி.

தொடர்புடைய வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் தொழில் நிமித்தம் 2022 ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தம்பதி ஒன்று அந்த குடியிருப்பின் உண்மையான உரிமையாளர்கள் என கூறிக் கொண்டு வீட்டை விற்பனை செய்ய முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் வீட்டையும் விற்றுள்ளனர். புதிய உரிமையாளர்கள் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் மொத்தவும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு, தங்களுக்கு தெரியாமல் தங்கள் வீடு விற்பனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து அந்த தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அந்த தம்பதி பொலிசாரை அணுகி, தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் வீட்டை விற்றுவிட்டு மாயமான அந்த மோசடி தம்பதியை பொலிசார் தேடி வருகின்றனர்.