Reading Time: < 1 minute

கனேடிய மாகாணம் ஒன்றில் அமைந்துள்ள உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன், தெற்கு ஒன்ராறியோவில், The Salvation Army என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், அவர்களால் அத்தனை பேருக்கு உணவு வழங்க முடியவில்லை. அதாவது, அவர்களிடமிருந்த உணவுப்பொருட்கள் காலியாகிவிட்டன.

ஜூன் மாதம், Food Banks Canada அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று, நினைத்ததைவிட அதிகம் கனேடியர்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்று கூறியுள்ளது.

தோராயமாக, சுமார் 25 சதவிகித கனேடியர்களால் தங்கள் குடும்பத்துக்கான உணவுப்பொருட்களை வாங்க இயலவில்லை என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

Feed Ontario என்னும் அமைப்போ, ஒன்ராறியோ மாகாணத்தில் உணவு வங்கிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உணவுபொருட்கள் வாங்க வந்தவர்களை திருப்பி அனுப்பும் நிலையை சந்தித்த The Salvation Army என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உணவு வங்கிக்கு மக்கள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து, தற்போது அந்த உணவு வங்கி மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.