கனடாவில் உணவு வங்கிகளில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உணவு வங்கி பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உணவு வங்கிகளின் உதவியை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பணவீக்க அதிகரிப்பு குறைந்த அளவான சமூக உதவிகள் ஆகிய காரணிகளினால் இவ்வாறு உணவு வங்கிகளில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கனடிய உணவு வங்கி குறித்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1.5 மில்லியன் பேர் உணவு வங்கிகளில் உதவியை நாடியுள்ளனர்.
இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 35 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
நிலையான வருமானம் பெறும் சிரேஸ்ட பிரஜைகள், குறைந்த வருமானம் ஈட்டும் மாணவர்கள் போன்றவர்கள் அதிகளவில் பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு வங்கிகளில் பயன் பெற்றுக் கொண்டவர்களில் மூன்றில் ஒரு வீதமானவர்கள் அதாவது 500,000 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா முழுவதும் காணப்படும் 4750உணவு வங்கிகள் தொடர்பில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.