ரஷ்யா, உக்ரைன் போருக்காக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டுவருகிறது.
ரஷ்யாவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் ரஷ்ய இராணுவத்தில் கட்டாயத்தின் பேரில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக அவர்களை வெளியேறுமாறு கனடா அரசு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு கனடா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போருக்காக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டுவருகிறது. கட்டாயத்தின்பேரில் ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
போருக்குச் செல்ல விருப்பமில்லாத ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருக்கும் காட்சிகளும், தங்கள் உறவினர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்களுடைய கால்களை உடைப்பதைக் குறித்த செய்திகளும் வேகமாக பரவிவருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் வாழும் கனேடியர்கள், அதாவது கனேடிய மற்றும் ரஷ்யக் குடியுரிமை ஆகிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு கனடா அரசு ஒரு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை கொண்டோர் ரஷ்ய இராணுவத்தில் கட்டாயத்தின் பேரில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக அவர்களை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு கனடா அரசு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா இரட்டைக் குடியுரிமையை சட்டப்படி அங்கீகரிப்பதில்லை. ஆகவே, ரஷ்ய மற்றும் கனேடிய குடியுரிமை ஆகிய இரட்டைக் குடியுரிமை கொண்டோரையும் ரஷ்யர்கள் என்றே முடிவு செய்யும் ரஷ்யா, கனேடிய தூதரகத்தை அணுகவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கலாம் என்று கூறியுள்ள கனடா அரசு, ரஷ்யாவிலிருந்து வெளியேற கனடா அரசை நம்பிக்கொண்டிருக்காமல், உடனடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யாவில் வாழும் கனேடியர்களை அறிவுறுத்தியுள்ளது.