Reading Time: < 1 minute

உக்ரைனில் இடம்பெற்று வரும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பொறுப்பு சொல்ல வேண்டுமென கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிறுவர்கள் இனவழிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆயிரக் கணக்கான உக்ரைன் சிறுவர்களை ரஸ்யா கடத்திச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சிறுவர்களை கடத்துவதன் மூலம் உக்ரைனின் அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் சமாதான மாநாட்டில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனின் பௌதீக ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை அழித்தொழிக்கும் முயற்சிகளில் ரஸ்யா தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலணித்துப் போக்கிற்கு ரஸ்யா பொறுப்பு சொல்ல வேண்டுமென ட்ரூடோ தெரிவித்துள்ளார்.